மயில்கள் உயிரிழப்பு - வனத்துறை விசாரணை
ஆலங்குடி அருகே மூன்று மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.;
Update: 2023-12-25 03:02 GMT
இறந்து கிடந்த மயில்
ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் ஊராட்சி சிதம்பரம் விடுதி பகுதி தோட்டத்தின் அருகே மூன்று மயில்கள் மர்மமான முறையில் இறந்த கிடந்தன. அருகில் மேலும் ஒரு மயில் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தது. அப்பகுதியினர் அளித்த தகவலின் பெயரில் சென்ற வனத்துறை அதிகாரிகள் உயிருக்கு போராடிய மயிலை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மூன்று மயில்களும் எவ்வாறு இறந்தன என விசாரிக்கின்றன.