பெண் யானை உயிரிழப்பு - வனத்துறை விசாரணை.
சீகூர் வன சரகத்தில் பெண் யானை இறந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-01-05 01:24 GMT
இறந்த பெண் யானை
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்க்கு உட்ப்பட்ட சீகூர் வன சரகத்தில் உள்ள கொடேகால் ஓடை வன பகுதியில் வனத்துறை ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுப்பட்டு இருந்தனர். அப்போது யானை ஒன்று இறந்திருப்பதை கண்டு வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இறந்த பெண் யானைக்கு வன கால்நடை மருத்துலர் ராஜேஷ் தலைமையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. விசாரணையில் இறந்தது 30 வயது மதிக்க தக்க பெண் யானை என்றும், உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்க்கு அனுப்பி முடிவுகள் வந்த பின்னரே இறப்புக்கான காரணம் தெரிய வரும் என முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.