சேதமடைந்த பள்ளி கட்டடம் சீரமைக்க வலியுறுத்தல்
காஞ்சிபுரத்தில் சேதம் அண்ணா பள்ளி கட்டிடம் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.;
By : King 24x7 Angel
Update: 2024-02-06 09:10 GMT
சேதமடைந்த பள்ளி கட்டடம் சீரமைக்க வலியுறுத்தல்
காஞ்சிபுரம் சேக்குபேட்டை வைகுண்டபுரம் தெருவில், டாக்டர் பி.எஸ்.சீனிவாசன் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளி வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தை ஒட்டி, 'ஹைடெக்' ஆய்வக கட்டடம் இயங்கி வருகிறது. வடகிழக்கு பருவ மழையின்போது, மைதானத்தில் தேங்கிய மழைநீரால், ஆய்வக கட்டடத்தின் தெற்கு பகுதி வெளிப்புற சுவரின் அடிப்பாகத்தில் சிமென்ட் காரை உதிர்ந்துள்ளதோடு, சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், நாளடைவில் இக்கட்டடம் வலுவிழக்கும் சூழல் உள்ளது. எனவே, ஆய்வக கட்டடத்தின் விரிசல் மற்றும் சிமென்ட் காரை பெயர்ந்து சேதமடைந்த பகுதியை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.