தொழிலாளிக்கு கொலை மிரட்டல்
திருவண்ணாமலை மாவட்டம், ,கிளுவானத்தம் பகுதியில் தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Update: 2024-03-31 08:57 GMT
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஒன்றியம் கிளுவானத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய் (வயது 26), கூலி தொழிலாளி. விஜயகீர்த்தி (42) முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவருக்கு சொந்தமான இடத்தில் இருந்த முள் மரங்களை விஜய் வெட்டியதால் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது . அவரை விஜயகீர்த்தி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இதுகுறித்து சேத்துப்பட்டு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகீர்த்தியை தேடி வருகின்றனர் .