மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு
By : King 24X7 News (B)
Update: 2023-11-04 04:45 GMT
கோப்பு படம்
மேட்டூர் அணை நீர்மட்டம் 53 அடியாக உயர்வு. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 2,285 கன அடியிலிருந்து இன்று 2,227 கன அடியாக குறைந்துள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவை காட்டிலும் குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் குறைவாக இருப்பதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 52.95 அடியில் இருந்து இன்று 53.16 அடியாக உயர்ந்துள்ளது. நீர்இருப்பு 19.86 டிஎம்சியாக உள்ளது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் அணை மின் நிலையம் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.