மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 1,699 கன அடியில் இருந்து இன்று 1,191 கன அடியாக குறைந்துள்ளது.

Update: 2023-12-21 11:12 GMT

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 1,699 கன அடியில் இருந்து இன்று 1,191 கன அடியாக குறைந்துள்ளது.

சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 1,191 கன அடியாக சரிவு. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது .இந்நிலையில் நீர்வரத்து நேற்று வினாடிக்கு 1,699 கன அடியில் இருந்து இன்று 1,191 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70.43 அடியில் இருந்து 70.51 அடியாக உயர்ந்துள்ளது. நீர்இருப்பு 33.14 டி.எம்.சி.யாக உள்ளது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் அணை மின் நிலையம் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News