ராமநாதபுரம் நகர் பகுதிக்கு இரண்டு உயர் உயர் கோபுர மின் விளக்கு அர்ப்பணிப்பு

ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து நகர் பகுதிக்கு இரண்டு உயர் கோபுர மின் விளக்குக அர்ப்பணிக்க்கபட்டுள்ளது.

Update: 2024-03-16 09:46 GMT

உயர்மின் கோபுர விளக்கு திறப்பு

ராமநாதபுரம் ரூபாய் 8. 60 லட்சம் செலவில் இரண்டு உயர் கோபுர மின் விளக்குகளை ராமநாதபுரம் நாடாளுமன்ற எம்பி நவாஸ்கனி நிதியிலிருந்து நகர் பகுதிக்கு வழங்கப்பட்டது.

இதில் ராமநாதபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட் உட்புறம் ஒரு உயர் கோபுர மின் விளக்குக்கும் இந்திரா நகரில் ஒரு உயர் கோபுர மின்விளக்கும் அமைக்கப்பட்டன இவற்றின் மொத்த மதிப்பீடு 8.60 லட்சம் ஆகும். இந்த இரு மின் விளக்குகளையும் ராமநாதபுரம் நகர் மன்ற தலைவர் ஆர். கே. கார்மேகம் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் நகர் மன்றத் துணைத் தலைவர் பிரவீன்தங்கம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர் அப்துல்ஜப்பார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் ஷாஜகான் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News