திருப்பூரில் இந்து முன்னணி சார்பில் ராமர் ஓவியத்திற்கு தீப வழிபாடு.

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு இ எஸ் ஐ மருத்துவமனை அருகே 140 அடி உயர வில் ஏந்திய ராமர் ஓவியத்திற்கு தீப வழி வழிபாடு இந்து முன்னணி சார்பில் நேற்று நடைபெற்றது.

Update: 2024-01-23 11:47 GMT

திருப்பூரில் இந்து முன்னணி சார்பில் 40 அடி ராமர் ஓவியத்திற்கு தீப வழிபாடு. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையிட்டு திருப்பூர் கொங்கு மெயின் ரோடு இ எஸ் ஐ ஆஸ்பத்திரி அருகே இந்து முன்னணி சார்பில் நேற்று மாலை தீபத்திருவிழா வழிபாடு நடந்தது. இது சுமார் 40 அடி நீளத்திற்கு வில்லேந்திய ராமர் ஓவியம் பிரமாண்டமாக வரையப்பட்டிருந்தது. ஓவியத்தை சுற்றிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அகல் விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. இதேபோல் அங்கு வைக்கப்பட்டிருந்த சீதாராமன், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடந்தது.

இதில் சுற்றுவட்டார பகுதி சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவில் பெண்கள் காகிதத்தில் ஸ்ரீ ராம ஜெயம், ஜெய ஜெய ராம மந்திரத்தை எழுதினர். மேலும் பரதநாட்டியம்,மாறுவேட போட்டி, பூ கட்டுதல் உட்பட பல்வேறு போட்டிகள் நடந்தது,.விழா நிறைவில் வானவேடிக்கை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை இந்து முன்னணி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News