மான் மீது மோதி உயிரிழப்பு: ஈமச்சடங்கு செலவிற்கு நிதி வழங்கிய வனத்துறை

ஆழியார் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் கடாமான் மீது மோதிய விபத்தில் பலியான நிலையில் ஈமச்சடங்கு செலவிற்கு நிதி வழங்கப்பட்டது.

Update: 2024-03-30 12:53 GMT

நிதியுதவி வழங்கல்

பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் 32 வயது இவர் தனது சொந்த வேலை காரணமாக இருசக்கர வாகனத்தில் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி வந்துள்ளார்.

பின்பு தனது வேலையை முடித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் வழியில் ஆழியார் அருகே சாலையில் நின்றிருந்த கடாமான் மீது இருசக்கர வாகன மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.. இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உள்ளார் பின்பு வனத்துறையினர் அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் மணிகண்டனை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.

ஆனால் ஆம்புலன்சில் ஏற்றிய சில நொடிகளிலேயே கடுகாயமடைந்த மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார்.. பின்பு வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து உயிரிழந்த மணிகண்டனின் மனைவியிடம் வனத்துறை சார்பாக ஈமச்சடங்கிற்காக ரூபாய் 50 ஆயிரத்தை பொள்ளாச்சி வனச்சரகர் புகழேந்தி வழங்கி அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்..

Tags:    

Similar News