சமூக வலைத்தளங்களில் அவதூறு - எஸ்பி எச்சரிக்கை
சமூக வலைத்தளங்களில் தவறான உள்நோக்கம் கொண்டு அவதூறு மற்றும் வதந்தி பரப்புவோரை சைபர் கிரைம் காவல்துறை மூலம் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி ஹர்ஷ் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய பாராளுமன்ற தேர்தல் 2024க்கான தேர்தல் அறிவிப்பு கடந்த16.03.2024 தேதி அன்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாகை மாவட்டத்தில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தலை நடத்திட வகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் யாரும் குறுஞ்செய்தி மூலமாகவோ (SMS) அல்லது சமூக வலைத்தளங்கள் மூலமாகவோ உண்மைக்கு புறம்பான செய்தியை எழுத்து வடிவிலோ, காட்சி வடிவிலோ அல்லது ஒலி, ஒளி வடிவிலோ (Text Message, Image or Video) தவறான உள்நோக்கம் கொண்டு வெளியிடுவோர் மீது சைபர் கிரைம் காவல்நிலையம் மூலமாக சம்மந்தப்பட்ட நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் தெரிவித்துள்ளார்.
மேலும் பொதுமக்கள் அல்லது சம்மந்தப்பட்ட நபர்கள் புகார் அளிப்பதற்கென்றே பிரத்யேகமாக நாகை மாவட்ட காவல்துறை அலைபேசி எண் ( 8428103090 ) அறிமுகப்படுத்தப்பட்டு தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இது போன்ற தவறுகளை உங்கள் ஊரில் வேறு யாரேனும் செய்வதாக தகவல் தெரிந்தால் மேலே உள்ள எண்ணிற்கு தகவல் தெரிக்கலாம் என நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்கள்.