"வல்லத்தில் செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்"
மூடிக்கிடக்கும்குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், வல்லம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகில் ரூ.7.96 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இதன் வாயிலாக, குறைந்த தொகையினை செலுத்தி, அப்பகுதி மக்கள் சுத்திகரிப்பட்ட குடிநீரை பெற்று குடித்து வந்தனர். ஆனால், ஓராண்டாக சுத்திகரிப்பு நிலையம் செயல்படவில்லை.
கோடைகாலம் நெருங்கும் நிலையில் குடிநீர் தேவை அதிகமாக இருக்கும். எனவே, மூடிக்கிடக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுக்கள் எதிர்பார்க்கின்றனர். அதேபோல், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 1.51 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட முருங்கை நாற்றாங்கால் பண்ணையும் செயல்படாமல் வீணாக உள்ளது.
அரசு சார்பில் பல வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தாலும், ஊராட்சி நிர்வாகத்தின் மெத்தன போக்கால், மக்களின் வரிப்பணம் வீணாகி வருவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.