மருத்துவ காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய தாமதம் : பொதுமக்கள் அவதி
தூத்துக்குடியில் மருத்துவ காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய மிகவும் தாமதம் செய்தவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளை கட்டணமில்லாமல் ஏழை மற்றும் குறைந்த வருவாய் பெறும் பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெற வேண்டும் என்ற உயரிய நோக்குடன், உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான முதலமைச்சர் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டம் பெறுவதற்கு பொதுமக்கள் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவ காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. இதனால், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலரும் சிரமம் அடைந்து வருகின்றனர். காப்பீட்டு அலுவலகத்தில் ஒரே ஒரு கணினி இருப்பதால் பணிகள் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் இதை கருத்தில் கொண்டு கூடுதலான கணினி அமைந்தால் விரைவாக பணிகள் நடைபெறும் என்று பொமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.