ஹெலிகாப்டா் மூலம் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் கடலோர காவல் படையினா், கடற்படையினா் நிவாரணப் பணியில் ஈடுபட்டனா்.

Update: 2023-12-22 13:17 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் கடலோர காவல் படையினா், கடற்படையினா் நிவாரணப் பணியில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் கடலோர காவல் படையினா், கடற்படையினா் நிவாரணப் பணியில் ஈடுபட்டனா். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18ஆம் தேதி பெய்த மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் கடல் போல் சூழ்ந்தது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு கடலோர காவல்படை சாா்பில் ஹெலிகாப்டா் மூலம் அத்தியாவசிய பொருள்களை வழங்கி வருகின்றனா். அதன்படி, மதுரை விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் கடலோர காவல் படையின் இரண்டு ஹெலிகாப்டா்கள் மூலம், அரசு சாா்பில் வழங்கப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்கள் தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் பகுதிகளில் வழங்கப்பட்டது.  இந்தப் பணியில் கடலோர காவல்படையினா் 250க்கும் மேற்பட்டோா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதியவா் மற்றும் கா்ப்பிணிப் பெண் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். மேலும், 3.2 டன் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டதாகவும் கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Tags:    

Similar News