ஆற்றின் கரையோரம் நிரந்தர பக்கசுவர் அமைக்க கோரிக்கை
கிள்ளியூர் ஆற்றின் கரையோரம் நிரந்தர பக்கசுவர் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.;
By : King 24x7 Website
Update: 2023-10-30 03:51 GMT
ராஜேஷ்குமார் எம்.எ.ஏ
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராஜேஷ்குமார் அரசுக்கு அனுப்பியுள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:- முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்திற்க்குட்பட்ட, குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதிகளான அதங்கோடு, செங்கிலம், மங்காடு, ஆலுவிளை, மாமுகம், பணமுகம், பள்ளிக்கல், முஞ்சிறை, பார்த்திவபுரம், விரிவிளை, வைக்கலூர், மரப்பாலம், பருத்திக்கடவு, கழியான்குழி, ஈழக் குடிவிளாகம், பரக்காணி போன்ற பகுதிகளில் மழை காலங்களில் ஏற்படும் பெருவெள்ளத்தால் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் ஆற்றுநீர் புகுந்து விடுகிறது. இதனால் ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள வீடுகள் ஆற்றில் அடித்து செல்லப்படுகிறது. ஆகவே மேற்குறிப்பிட்ட பகுதிகளில் தாமிரபரணி ஆற்றின் இருப்பக்கங்களிலும் நிரந்தர பக்கசுவர்கள் அமைத்து அங்கு குடியிருக்கும் பொது மக்களையும் அவர்களின் வீடுகளையும் பேரழிவிலிருந்து பாதுகாக்க போர்க்கால் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். என மனுவில் கூறியுள்ளார்.