தினசரி ரயில் இயக்க வேண்டுமென கோரிக்கை
பழநி வழித்தடத்தில் திருப்பதிக்கு தினசரி ரயில் இயக்க வேண்டுமென ரயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Update: 2024-05-24 12:50 GMT
பழநி ரயில் உபயோகிப்போர் நலச்சங்கத்தின் சார்பில் ரயில்வே அமைச்சருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, கூட்டத்தில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாமல் இருக்க பழநி-புதுதாராபுரம் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும். மதுரையில் இருந்து பழநி, பொள்ளாச்சி, கோவை வழியாக திருப்பதிக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும். திருவனந்தபுரம்-மதுரை செல்லும் அமிர்தா ரயிலை போடி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். பழநியில் வழித்தடத்தில் ராமேஸ்வரம், கன்னியாகுமரி, பெங்களூரு, கொச்சின் ஆகிய ஊர்களுக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.