மேட்டூர் காவிரி ஆற்றில் ஆகாயத்தாமரை செடிகளை அப்புறப்படுத்த கோரிக்கை

மேட்டூர் காவிரி ஆற்றில் பாடர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அப்புறப்படுத்த கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2024-05-04 13:02 GMT

ஆகாய தாமரை

சேலம் மாவட்டம்,மேட்டூர் அனணயிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செக்கனுர் கதவனை மின் நிலையம் வரை 0.50 டி.எம்.சி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு மின் உற்பத்தி மற்றும் பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது.

மேலும் காவிரி கரையோரம் வசிக்கும் பொது மக்கள்  குடிப்பதற்கு,  கால்நடைகளுக்கும் தேக்கி வைக்கும்  காவிரி நீரை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில்  அணையின்  அடிவாரம் தொடக்கி  காவேரி கரையோர பகுதிகளான தூக்கணாம்பட்டி,

மாதையன்குட்டை,காவேரிகிராஸ் , நவப்பட்டி ,செக்கானூர் ஆகிய  பகுதிகளில் ஆகாய தாமரை செடிகள் படர்ந்து காணப்படுவதால் தண்ணீர் மாசடைந்துள்ளது. இந்த தண்ணீரை பொது மக்கள் குடிப்பதற்கும், குளிப்பதற்கும்  பயன்படுத்த முடியாது சூழ்நிலை உருவாகியுள்ளது.மேலும் ஆகாய தாமரை செடிகளிலிருந்து உற்பத்தியாகும் கொசுக்களால் கரையோர பகுதி மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். நீரேற்று நிலையங்களை ஆகாயத்தாமரை செடிகள் ஆக்கிரமித்துள்ளதால் பொது மக்களுக்கு  விநியோகம் செய்யும் குடிநீரும் துர்நாற்றம் வீசுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே காவிரி ஆற்றில் மண்டி காணப்படும் ஆகாய தாமரை செடிகளை  அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என  நீர் வளதுறையினருக்கு பொது மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News