ஓபிஎஸ் என்ற பெயருக்கு டிமாண்ட்: முன்னாள் அமைச்சர்
தற்போது ஓபிஎஸ் என்ற பெயருக்கு டிமாண்ட் வந்துவிட்டது காரியாபட்டியில் நடந்த அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் விமர்சனம் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சுழி சட்டமன்ற தொகுதி அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் கூட்டம் நடைபெற்றது. இதில் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்தின் தலைமை வகித்தார்.
மேலும் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயக்குமார், கே.டி. இராஜேந்திர பாலாஜி, மணிகண்டன், அன்வர்ராஜா, ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ஜெயபெருமாள் அவர்களை அறிமுகம் செய்து தேர்தல் தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அவர்கள் பேசுகையில் அதிமுகவில் உள்ள தொண்டர்கள் அனைவரும் கட்சியின் வேட்டியை தைரியமாக கட்டி உள்ளோம், இரட்டை இலையை சின்னமாக கூறிக் கொண்டுள்ளோம் ஆனால் அதிமுகவில் முன்னாள் முதல்வராக இருந்த ஓபிஎஸ்ஐ கட்சி வேட்டியையும் இரட்டை இலை சின்னத்தையும் அதிமுகவை சொந்தம் கொண்டாடக்கூடாது என உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதி அரசர்கள் கூறியிருப்பதாகவும்,
நாம் அனைவரும் அதிமுக தொண்டர்களாக வேஷ்டியையும் கொடியையும் பயன்படுத்தி வரும் நிலையில் மூன்று முறை முதல்வராக இருந்த ஓபிஎஸ் மட்டும் ஏன் இந்த நிலைமை என சிந்தித்ததாகவும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உடலில் குறைவால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் சிகிச்சையில்,
இருந்த பொழுது அவரை மேல் சிகிச்சைக்காக தனது பதவியை பயன்படுத்தி வெளிநாட்டிற்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லாமல் அந்த பதவியை காப்பாற்றிக் கொள்ள மௌனச்சாமியாராக இருந்தவர் ஓபிஎஸ் என குற்றம் சாட்டினார். மூன்று முறை முதல்வராக இருந்து இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற ஓபிஎஸ் இன்று சுயேசையாக சின்னத்தில் போட்டியிடுவதற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா,
அவர்களின் ஆன்மா தான் காரணம் இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியிடுங்கள் ஒரு நாட்டிற்கு உங்களை ராஜாவாக ஆக்குகிறேன் என என்னிடம் யாராவது கூறினால் உயிரை விடுவேனே தவிர இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியிட மாட்டேன் என நான் கூறுவேன் ஆனால் ஓபிஎஸ் இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியிடுகிறார். ஒரு தொகுதியில் நின்று வெற்றி பெற்று ஓபிஎஸ் என்ன செய்யப் போகிறார் என கேள்வி எழுப்பினார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 38 தொகுதியில் வெற்றி பெற்ற திமுகவினரால் ஒன்று செய்ய முடியவில்லை இவர் ஒரு தொகுதியில் நின்று என்ன செய்யப் போகிறார் ஓபிஎஸ் எதற்காக இரட்டை இலையை எதிர்த்து நிற்கிறார் என்ற ஒற்றைக் கேள்விதான் அனைத்து அதிமுக தொண்டர்கள் மனதிலும் இருப்பதாகவும் ஓபிஎஸ் அரசியல் வளர்ச்சி என்பது தேனி மாவட்டம் தான் அதை தற்போது நன்றி கடனுக்காக விட்டுவிட்டு அவர் ஏன் ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறார் இரட்டை இலையை எதிர்த்துப் போட்டியிடுவதற்கு உங்களுக்கு எப்படி மனசு வருகிறது என கேள்வி எழுப்பினார் ஓபிஎஸ் தேர்தலை நிற்பதால் கண்டனர் கண்டனராக வரும் என எதிர்பார்க்கிறார்கள் நாங்கள் தான் தேனி பாராளுமன்ற தேர்தலிலேயே பார்த்தோமே குடிப்பதற்கு தண்ணீர் கூட வராது என்ன விமர்சித்தார் மேலும் பேசிய அவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்து,
திமுக ஆட்சிக்கு வருவதற்கு காரணம் ஓபிஎஸ் தான் மத்திய அரசு கொடுக்கும் அனைத்து அழுத்தத்தையும் நெருக்கடியையும் ஏற்றுக்கொண்டு எம்ஜிஆர் அவர்கள் உருவாக்கி ஜெயலலிதா அவர்கள் வளர்த்த அதிமுகவை உயிரைக் கொடுத்து காப்பாற்றுவேன் என கூறிய எடப்பாடி யாருக்கு ராயல் சல்யூட் அடிக்கலாம் என கூறினார் பாரதப் பிரதமர் மோடி தனக்கு அளித்த மரியாதை போதாது,
தனது தொண்டர்களுக்கும் உரிய மரியாதை அளிக்க வேண்டும் என தனக்கு கொடுத்த மரியாதையை ஏற்காதவர் எடப்பாடி பழனிச்சாமி எனவும் ஆனால் இதே மரியாதையை ஓபிஎஸ் இருக்கு அளித்திருந்தால் அவர் அதிமுகவை தனக்கும் தனது மகனுக்கும் ராஜ்யசபா உறுப்பினர் பதவியைப் பெற்றுக் கொண்டு அதிமுகவை பிரதமரின் காலடியில் வைத்திருப்பார் என கூறினார் ஓபிஎஸ் கும்பிடுவதை பார்த்து தமிழர்கள் அவ்வாறுதான் கும்பிடுவார்கள் என அனைவரும் நினைத்துக் கொண்டு உள்ளார்கள்.
ஆனால் நாங்கள் அன்பிற்கு மட்டும் தான் கும்பிடுவோம் அடக்க நினைத்தால் நெருப்பாய் இருப்போம் எனவும் கூறினார் திருச்சுழி தொகுதியில் ஓபிஎஸ் என்ற பெயருக்கு டிமாண்ட் ஏற்பட்டிருப்பதாகவும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் உடன் போட்டியிட ஏராளமான ஓபிஎஸ் வந்துவிட்டதாகவும் எத்தனை உரிமை மீட்பு குழு வைத்தாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை எனவும் விமர்சித்தார் திமுகவினரால் தங்களை ஒன்றும் செய்ய முடியாது எனவும்,
அதிகபட்சமாக 30 நாட்கள் ஜெயில் வைக்க முடியும் எனவும் 31 வது நாள் மீண்டும் வருவோம் எனவும் அரசியல் களத்தில் அதிமுகவிற்காக நிற்போம் எனவும் அப்படி நிற்பவர் தான் முன்னாள் அமைச்சர் கே.டி. இராஜேந்திரபாலாஜி எனவும் பேசினார். அதிமுக தொண்டர்களை தொடும் வரை புஸ்வானமாக இருப்போம் தொட்டுவிட்டால் எரிமலையாக வெடிப்போம்.
மேலும் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாக விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் திறந்து விடப்படும் என தொண்டர்களுக்கு தேவையானதை வழங்கப்படும் என சூசகமாக கூறினார் இதைப் புரிந்தவர்கள் கைதட்டுங்கள் இல்லாதவர்கள் கைதட்ட வேணாம் எனவும் கூறினார் தேவையான நேரத்தில் தேவையான அளவிற்கு தண்ணீர் திறந்து விடப்படும் என கூறி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.