பட்டா விசாரணையை நிறுத்த கோரிக்கை: கிராம மக்கள் முற்றுகை!
இலவச பட்டா நிலம் குறித்த விசாரணையை நாடாளுமன்ற தேர்தல் வரை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Update: 2024-04-11 01:41 GMT
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கரடிகுளம் சி.ஆர். காலனியில் உள்ள 153பேருக்கு கடந்த 1993ம் ஆண்டு அரசு சார்பில் குடியிருப்புகளுக்கான நில பட்டா வழங்கப்பட்டது. ஆனால் முறையாக அளவீடு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சிலர் பழைய பட்டாக்களை காட்டி தங்கள் இடம் என்று கூறி ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. இதையெடுத்து இலவச நில பட்டா பெற்ற மக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதற்கான விசாரணையை நாடாளுமன்ற தேர்தல் வரை நிறுத்தி வைக்க வேண்டும், மேலும் விசாரணை நேர்மையாக நடத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர்கள் சாலமன்ராஜ், தெய்வேந்திரன் தலைமையில் கோவில்பட்டி கோட்டாட்;சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு மனு அளித்தனர்.