தேனி : கடனை அடைக்காததால் வீடு இடிப்பு
தேனி அருகே குடியிருந்த வீட்டை இடித்து தரைமட்டமாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.
தேனி மாவட்டம், போடி தாலுகா உப்புக்கோட்டை கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (60) மனைவி பகவதி (55), தம்பதியினர் மகள் நாகதேவி, தேனி தனியார் பள்ளியில் (11 ஆம் வகுப்பு) ஹேமவர்ஷினி ( 5 ஆம் வகுப்பு) இவர்கள் நான்கு பேரும் தகரக் கொட்டகை அமைத்து, இவர்கள் நான்கு பேரும் குடியிருந்து வருகின்றனர். கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் வயதான தம்பதியர் நாகராஜ் பகவதி தம்பதியினர்.
பகவதியின் தங்கையான பாண்டி மாணிக்கம் மனைவி முருக லட்சுமி இடம் கடன் வாங்கி இருந்தார். வாங்கிய கடனை திருப்பி தர காலதாமதம் ஏற்பட்டது. இதன் காரணத்தால் பகவதி குடியிருந்த வீட்டை முருக லட்சுமி கணவர் பாண்டி மாணிக்கம் தம்பதியினர் இருவரும் சேர்ந்து நேற்று இரவு பகவதி குடியிருந்து வரும் தகரக் கொட்டை வீட்டை முழுவதுமாக இடித்து தரை மட்டமாக்கி விட்டனர்.
இதுகுறித்து வீரபாண்டி காவல் நிலையத்தில் பகவதி புகார் தெரிவித்தார். வீரபாண்டி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.