ஜாகீர் அம்மாபாளையத்தில் கோவில் சிலைகள் இடித்து அகற்றம்

சேலம், ஜாகீர் அம்மாபாளையத்தில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் சிலைகளை அகற்ற கூடாது என தொழிலாளர் விடுதலை முன்னணியினர் மனு அளித்துள்ளனர்.

Update: 2024-02-12 12:49 GMT

அம்மன் சிலைகள் அகற்றம்

தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணைச்செயலாளர் சரசுராம் ரவி தலைமையில் அங்காள பரமேஸ்வரி கோவில் நிர்வாகிகள் மற்றும் அந்த பகுதி மக்கள் மாநகராட்சி கமிஷனரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது,

சேலம், ஜாகீர் அம்மாபாளையத்தில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இதனை அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அந்த கோவில் சிலைகள் மாநகராட்சி இடத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளதாக கூறி மாநகராட்சி அதிகாரிகளால் திடீரென இடித்து அகற்றப்பட்டுள்ளது.

குறிப்பாக ஒரு வழிபாட்டு தலத்தை இடிக்க வேண்டுமானால் முன்கூட்டியே மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிட வேண்டும். ஆனால் எந்த அறிவிப்பும் இல்லாமல் மாநகராட்சி அதிகாரிகள் சாமி சிலைகளை இடித்து அப்புறப்படுத்திவிட்டு தற்போது அங்கு முள்வேலி போடமுயற்சி செய்கிறார்கள். இது தவறானது. எனவே பல தரப்பு மக்களும் வழிப்பட்டு வரும் அந்த கோவிலை சுற்றி முள்வேலி போடக்கூடாது.

Tags:    

Similar News