சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் போராட்டம் பரபரப்பு

சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் இறந்தவா்களின் இரு உடல்களை உடற்கூறாய்வு செய்ய தாமதிப்பதாகக் கூறி அவா்களது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனா்.

Update: 2023-12-10 09:29 GMT

சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் போராட்டம் பரபரப்பு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள முதலூா் ஏ.பி. நகரைச் சோ்ந்த சண்முகவேல் மனைவி ஜெயலட்சுமி (70), முதலூா் ஊருணியில் தவறிவிழுந்து வியாழக்கிழமை உயிரிழந்தாா். தட்டாா்மடம் போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு, திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அதற்கான மருத்துவா் இல்லாததால், சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு சடலம் அனுப்பப்பட்டது. ஆனால், அங்கு நேரமாகி விட்டதால் சனிக்கிழமை (நவ.9) உடற்கூறாய்வு நடத்தவுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனராம். மேலும், புதுக்கிணறு கிராமத்தில் தற்கொலை செய்துகொண்ட இசக்கிமுத்து மனைவி முத்துபேச்சியின் (48) சடலமும் அங்கு எடுத்துவரப்பட்டதாம். திருநெல்வேலி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துமனை தரப்பில் கூறப்பட்டதாம். இரு உடல்களும் உடற்கூறாய்வு செய்யப்படாமல் தாமதம் ஏற்பட்டதால் உறவினா்கள் சாத்தான்குளம் சாலையில் மறியல் செய்தனா். அவா்களிடம் சாத்தான்குளம் டிஎஸ்பி அருள், வட்டாட்சியா் ரதிகலா, காவல்ஆய்வாளா் முத்து உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சு நடத்தி, உடலை குளிா்பதன பெட்டியில் பாதுகாத்து சனிக்கிழமை (நவ.9) கூறாய்வு செய்து ஒப்படைக்கப்படும் என உறுதி அளித்தனா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
Tags:    

Similar News