எறையூர் சக்கரை ஆலை முன்பு பாரதீய மஸ்தூர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
எறையூர் சக்கரை ஆலை முன்பு பாரதீய மஸ்தூர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈ.;
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னனி கட்சியினர்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் எறையூர் சர்க்கரை ஆலை முன்பு பாரதீய மஸ்தூர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் எஸ்.மணிவேல் தலைமையில் கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர்கள் தனிக்கையரசு, சிவா, ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
இதில் பாரதீய மஸ்தூர் சங்க மாவட்ட தலைவர் ஏ.கே.செந்தில்குமார் எறையூர் சர்க்கரை ஆலையில் எட்டு ஆண்டு காலமாகவும் மாவட்ட செயல் தலைவர் கிருஷ்ணமூர்தி 38 ஆண்டுகளாகவும் பணியாற்றி வந்துள்ளனர். இந்த நிலையில் எந்தவிதமான முன் அறிவிப்பும் இல்லாமல் மேற்கண்ட இரண்டு நபர்களை பணிக்கு வர வேண்டாம் என்று திடிர் என நிறுத்தி உள்ளனர். இதனை கண்டித்து இன்று பாரதீய மஸ்தூர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வரும் 15 நாட்களுக்குள் மேற்கண்ட இரண்டு நபர்களை பணியில் சேர்க்கவில்லை எனில் இதே இடத்தில் மிகப்பெரிய கண்டன உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறும் என்று கூறினர்.
மேலும் அவர்களை நீக்குவதற்கு என்ன காரணம் என்று அறிவிக்கவில்லை எந்த விதமான தவறும் செய்யாதவர் மீது பணிநீக்கம் நடவடிக்கை செய்தது ஏன், எனவே உடன் மேற்கண்ட இரண்டு நபர்களையும் பணியில் அமர்த்த வேண்டும் என்று உரையாற்றினார். இதில் மாநில செயர்குழு உறுப்பினர் எழில். திருச்சி மண்டல அமைப்பாளர் அமைப்பு செயலாளர் நாராயணசாமி ,மாவட்ட நிர்வாகிகள் சிவராஜ், அமுதா, கர்ணன், தமிழரசன்,
இந்து முன்னணி மற்றும் இந்து திருக்கோயில் கூட்டமைப்பு உள்ளிட்ட பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இறுதியில் மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.