கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு ஆர்ப்பாட்டம்
பெரம்பலூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி சி ஐ டி யு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
பெரம்பலூர் மாவட்டத்தில், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சியில் பணிபுரியும் டேங் ஆபரேட்டர்கள் தூய்மை பணியாளர்கள் தூய்மை காவலர்கள் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சி ஐ டி யு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே நகராட்சி அலுவலகம் முன்பு , பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம், டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் சங்கம், ஊராட்சி OHT ஆபரேட்டர் தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் சங்கம், சி ஐ டி யு சார்பில், மாவட்டத் தலைவர் ரங்கநாதன் தலைமையில், பெரம்பலூர் மாவட்டத்தில், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சியில் பணிபுரியும் டேங் ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள் தூய்மை காவலர்கள், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறையின் கீழ் பணிபுரியும் தூய்மை காவலர்கள் பம்பு ஆப்ரேட்டர் துப்புரவு பணியாளர்கள், டிபி சி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து குறைந்தபட்ச ஊதியம் ரூபாய் 26 ஆயிரம் வழங்கிட வேண்டும், தொழிலாளரின் வயிற்றில் அடிக்கும் தூய்மை பணியை தனியாருக்கு தாரை வார்க்கும் அரசாணை 10, 152, 139 - ரத்து செய்ய வேண்டும் பணிக்கொடை, ஓய்வூதியம், வாரிசு வேலை, வழங்கிட வேண்டும், இரண்டு ஆண்டுகள் பணி முடிந்த தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து ஊராட்சி, நகராட்சி மூலம் நேரடி ஊதியம் வழங்கிட வேண்டும், மாவட்ட ஆட்சியர் அறிவித்த தினக்கூலி வழங்கிட வேண்டும், பிடித்தம் செய்த இபிஎப் (EPF) தொகையை முறையாக செலுத்த வேண்டும், செலுத்தாத தொகை உடனடியாக திருப்பி வழங்கிட வேண்டும், வார விடுமுறை மற்றும் பாதுகாப்பு சாதனங்களை வழங்கிட வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு வலியுறுத்தி கண்டன கோஷமிட்டு ஆர்ப்பாட்டம், நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டசெயலாளர் அகஸ்டின், பொருளாளர் ரங்கராஜ், துணைத் தலைவர் கருணாநிதி ,மாவட்டத் துணைச் செயலாளர்கள் செல்வி, மணிமேகலை, சி ஐ டி யு மாவட்ட குழு உறுப்பினர்கள் கிருஷ்ணசாமி, அழகேசன் பன்னீர்செல்வம் யுவராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர் .