செல்போன் டவரில் ஏறி ஆர்ப்பாட்டம்
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்க ஆதரவாக அரியலூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
By : King 24X7 News (B)
Update: 2024-02-23 15:10 GMT
விவசாய உற்பத்தி பொருட்களுக்கு ஆதார விலை கிடைக்க வேண்டும் எனவும், விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு துப்பாக்கி சூடு நடந்துள்ளது.
இதனை கண்டித்து அரியலூர் மாவட்டம் சேனாபதி கிராமத்தில் விவசாயிகள் 2 பேர் செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும் என வலியுறுத்தினர்.
இதனையடுத்து தீயணைப்பு துறையினர் அவர்களை பத்திரமாக மீட்டு கீழே கொண்டு வந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.