ஸ்ரீமுஷ்ணத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஸ்ரீமுஷ்ணத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
By : King 24x7 Website
Update: 2023-10-30 04:43 GMT
கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை அலுவலகத்தை மற்றும் பாலன் இல்லத்தையும் சமூக விரோதிகளால் கற்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்களால் வீசி தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்யக்கோரி சுப்பிரமணியன் தலைமையில் வட்ட செயலாளர் முருகவேல் சுந்தர்ராஜன் அந்தோணிசாமி சுப்பிரமணியன் ஆகிய சுமார் 50-க்கும் மேற்பட்டோர் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோரியும் அவர்கள் மீது பிணையில் வர முடியாத அளவுக்கு வழக்கு போடவும் என கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆர்ப்பாட்டக்காரர்களை பேச்சுவார்த்தை நடத்தி கலந்து செல்லுமாறு அறிவுறுத்தினர் இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.