ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை கலெக்டர் அலுவல கம்முன்பு ஆர்ப்பாட்டம்

Update: 2024-05-11 08:56 GMT

தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை கலெக்டர் அலுவல கம்முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். வேதாரண்யம் வட்ட பொறுப்பாளர் முருகையன் வரவேற்றார்.

நாகப்பட்டி னம் மாவட்ட செயலாளர் சிவசண்முகம், வட்ட பொறுப்பா ளர்கள் சிங்காரவேலு, மோகன் ஆகியோர் முன்னிலை வகித்த னர். அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சரியான எடை யில் தரமாக பொட்டலமிட்டு வழங்க வேண்டும். சரியான எடையில் அத்தியாவசிய பொருட்களை வழங்காமல் அதிக அபராதம் விதிக்கும் சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும். நகர்வு பணியில்,

இறக்கு கூலி கட்டாயமாக வசூல் செய்யும் டைமுறையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. முடிவில் மாவட்ட பொருளாளர் பூமாலை நன்றி கூறினார்.

Tags:    

Similar News