பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல்லில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட தலைவர் தண்டபாணி தலைமையில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட துணைத் தலைவர் பாஸ்கரன் வரவேற்றார். சரவணன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் தரமான பொருட்களாக பொட்டலமாக வழங்கப்பட வேண்டும், சரியான எடையில் அத்தியாவசிய பொருட்களை இறக்காமல் அபராதம் விதிக்கும் சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும், நியாய விலைக்கடையில் பணிபுரிபவர்களுக்கு 20 சதவிகிதம் போனஸ் தொகை பாகுபாடின்றி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதில்,ராஜ்குமார், பாலமுருகன், நடராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.முடிவில் பட்டு வளர்ச்சித் துறை மோகன் நன்றி கூறினார்.