வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மேட்டூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-02-28 02:35 GMT

ஆர்ப்பாட்டம் 

சேலம் மாவட்டம்,மேட்டூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு  தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு இச்சங்கத்தின் வட்ட கிளை தலைவர் ஆ.கோவிந்தராஜ் தலைமை வகித்தார். இதில் துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையினை உடன் வெளியிட வேண்டும், இளநிலை வருவாய் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையில் அடிப்படையில் விதித்திருந்த ஆணையினை உடன் வெளியிட வேண்டும், அனைத்து வட்டங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கென புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்திட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  போராட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில் தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை கால வரையின்றி போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.பணியை புறக்கணித்து வருவாய் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் பல்வேறு வேலைகளுக்காக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Tags:    

Similar News