சங்கராபுரத்தில் வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Update: 2023-11-28 08:44 GMT
சங்கராபுரத்தில் வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாலுகா அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு,மாவட்ட துணைத் தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் சதாம் உசேன்,பொருளாளர் ராணி,பிரசார செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர்.தலைவர் மணிகண்டன் வரவேற்றார்.துணைத் தலைவர் பாலசுந்தரம் இணைச்செயலாளர் சாந்திஉட்படபலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் கிராம உதவியாளர் பணியின் போது இறந்தால் கருணை அடிப்படையில் அவரது வாரிசுக்கு பணி வழங்கும் உத்திரவை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.