ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் !
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சேலம் மாவட்ட கிளை சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-03-13 09:53 GMT
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சேலம் மாவட்ட கிளை சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க மாநில துணைத்தலைவர் திருவேரங்கன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ், பொருளாளர் வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட அலுவலர்கள், ஊழியர்களுக்கு மிரட்டல் விடுக்கும் ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கை குறித்த கோஷங்களை எழுப்பினர்.