ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சங்ககிரியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்;
By : King 24x7 Website
Update: 2023-12-22 18:01 GMT
சங்ககிரியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சேலம் மாவட்டம், சங்ககிரியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் தன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. தமிழரசு சத்துணவு திட்டத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், மக்கள் நலப்பணியாளர்களுக்கு ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள அடிப்படை பணியாளர் பணியிடங்களில் முன்னுரிமை வழங்க வேண்டும், மக்கள் நலப்பணியாளர்களை குழுகாப்பீட்டுத்திட்டத்தில் சேர்க்க வேண்டும், ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களுக்கு பணிப்பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் முத்துசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சிராஜிதின்பாஸ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கல்யாண்குமார், ஊராட்சி அலுவலர்கள், மக்கள் நலப்பணியாளர்கள் வேல்முருகன், ரமேஷ், சிவநேசன், கண்ணன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.