வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்!
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே கம்யூனிஸ்ட் கட்சியினரை கண்டித்து வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Update: 2024-06-21 13:55 GMT
நெல்லையில் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததன் காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டது. இதற்கு காரணமான 13 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவத்தில் ஜாதி மறுப்பு திருமணம் செய்து வைப்பதாக கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஜாதிய மோதலை தூண்டுவதாக குற்றம் சாட்டி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே நேற்று வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.