ஆ.ராசாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

வ.உ.சிதம்பரம் பிள்ளை குறித்து அவதூறாக பேசியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவிற்கு எதிராக வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-02-19 08:33 GMT
 நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் திமுகவின் துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா  கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் சுதந்திரப் போராட்ட வீரர் வ உ சிதம்பரனார் பிள்ளை குறித்து அவதூறாக பேசியதாகவும் , அவரின் பேச்சுக்கு ஆ ராசா பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் ,  சுதந்திரப் போராட்ட வீரர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆ. ராசாவின் மீது திமுகவின் தலைவரும் முதல்வருமான மு க ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆ.ராசாவின் உருவப்படத்தை செருப்பால் அடித்தும் , கிழித்தும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால் காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
Tags:    

Similar News