கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு உரிய நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்
கள்ளசாராயத்திற்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கள்ளகுறிச்சி சம்பவத்தை கண்டித்தும், கள்ளசாராயத்திற்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க கோரி மயிலாடுதுறை சகிட்டப்பா அங்காடி முன்பு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் ஐய்யப்பன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கள்ளச்சாராய உயிரிழப்புகளை தடுக்க கோரியும், கள்ளசாராய விற்பனையில் ஈடுபடும் உண்மையான நபர்களை கைது செய்ய கோரியும், கள்ளகுறிச்சி கள்ளசாராய விற்பனையை காவல்துறையினர் தடுக்காத கண்டித்தும்,
கள்ளசாராயத்திற்கு பலியான குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிவார ணம், அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதில் மாநில செயலாளர் சிங்காரவேலன், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.