திருவாடானை அருகே சேதமான சாலையை சீரமைக்க கோரி ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம் திருவாடானை அருகே சேதமான சாலையை சீரமைக்க கோரி சாலையில் நாற்று நடும் போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
By : King 24X7 News (B)
Update: 2023-12-15 16:06 GMT
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே செங்கமடை கிராம சாலை சில ஆண்டுகளாக சேதமடைந்து உள்ளதால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் மழை காலங்களில் சேரும் சகதியுமாக மாறிவிடுகிறது. இது குறித்து பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்காததால் ஆத்திரமடைந்த மக்கள் கொச்சி தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் செங்கமடை கிராம சாலையில் நாற்று நட முயன்றவர்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் கோட்டை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் புதிய சாலை அமைத்து தரப்படும் என உறுதி அளித்தார். இதனையடுத்து தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்த சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.