சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
கரூரில், சம வேலைக்கு சம ஊதியம்; தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கரூரில்,சம வேலைக்கு சம ஊதியம்- தேர்தல் வாக்குறுதி நிறைவேற்ற கோரி கைக்குழந்தையுடன் ஆர்ப்பாட்டம். கரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில், மாநில செயற்குழு உறுப்பினர் தேவதாஸ் தலமையில்,சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவதாக தேர்தலின் போது வாக்குறுதி அளித்த திமுக அரசு கூறியதை, நிறைவேற்ற வலியுருத்தியும், சென்னையில் போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் மூன்றாவது நாளாக நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் நாகராஜ், கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கைக்குழந்தையுடன் பங்கேற்ற ஆசிரியர்கள் குழந்தையிடமும் போராட்ட கொடியினை கொடுத்து போராட்டத்தில் ஈடுபடுத்தினர். போராட்டத்தின் இறுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் மாவட்ட பொருளாளர் பிரபு.