பெரம்பலூரில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
பெரம்பலூரில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு பொது சுகாதாரத்துறை, கிராம பகுதி சமுதாய சுகாதார செவிலியர் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பெருந்திரள் முறையீடு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம்ஜூன் 25ஆம் தேதி நடைபெற்றது. கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் சந்தானலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் VHN துணை மைய காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும்,
மக்கள் தொகைக்கு ஏற்ப புதிதாக உருவாக்கப்பட உள்ள துணை சுகாதார நிலையங்களில் MLHP, செவிலியர்களை நியமனம் செய்யும் கருத்துருவை கைவிட்டு, கிராம சுகாதார செவிலியரை பணி அமர்த்த வேண்டும்,
மேலும் செவிலியர்களின், குறைபாடுகள், இடர்பாடுகளை சரி செய்யும் வரை, கிராமப் பகுதி சமுதாய சுகாதார செவிலியர்களை தரவுகளை உள்ளீடு செய்ய அழுத்தம் கொடுப்பதை நிறுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திகோசமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், கூட்டமைப்பின் செயல் தலைவர் கோமதி, மாநில தலைவர் மீனாட்சி, துணைத்தலைவர் அறிவுக்கொடி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டனர்.