பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்கக்கோரி பாஜக ஆர்ப்பாட்டம்

பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2023-11-24 09:02 GMT
பாஜக  ஆர்ப்பாட்டம் 
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விருதுநகர் முழுவதும் நகராட்சி நிர்வாகம் சார்பாக பாதாள சாக்கடைத்திட்டம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இத்தனை வருடங்கள் கடந்தும் திட்டம் பயன்பாட்டிற்கு வரவில்லை. சாக்கடைத்திட்டத்திற்காக சாலைகளில் குழிகள் தோண்டி சரியான முறையில் இணைப்புதரப்படாமல் உள்ளது. சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழிகளை மூடாமல் இருப்பதால் பல பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூராக உள்ளது. மேலும் தற்போது மழைக்காலம் என்பதால் தோண்டப்பட்டிருக்கும் குழிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் கொசு உற்பத்தி அதிகமாகி பொதுமக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கபட்டு வருகின்றனர். தற்போது மழைக்காலத்தில் தோண்டப்பட்ட குழிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீருடன் மழைத்தண்ணீரும் சேர்ந்து சாலைகளில்  தேங்கி நிற்பதால் இரு சக்கர வாகனங்களில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மேடு பள்ளம் தெரியாமல் விழுந்து செல்லும் அவலநிலை உள்ளது. எனவே உடனடியாக நகராட்சி நிர்வாகம் தலையிட்டு பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக  பாஜகவினர் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட பார்வையாளர் வெற்றிவேல், மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன், மாவட்ட துணைத்தலைவர்கள் சங்கரேஸ்வரி, ராமஜெயம், பட்டியல் அணி மாவட்ட தலைவர் பாலமுருகன், குருசாமி, வடக்கு ஒன்றிய செயலாளர் ராமதாஸ், பிரச்சார பிரிவு காமாட்சி உட்பட பா.ஜ.க. நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.  ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை நகர  தலைவர் நாகராஜன் செய்திருந்தார்.
Tags:    

Similar News