திருப்பத்தூரில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூரில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வருமான வரி திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Update: 2024-03-30 14:33 GMT

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்

திருப்பத்தூர் மாவட்டம் ஸ்டேட் வங்கி எதிரில் காங்கிரஸ் சார்பில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வருமான வரி திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட தலைவர் பிரபு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்பாட்டத்தில் காங்கிரஸின் வங்கிக் கணக்கை முடக்கியும் வருமான வரித்துறையை ஏவி விட்டு 1,823 கோடி அபராதம் விதித்ததை கண்டித்து கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் ,மாநில செயலாளர்,

ஜெயபிரகாஷ்,நகர தலைவர் பரத், மற்றும் ஒன்றிய தலைவர்கள்,ஜாவித்,தண்டபாணி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிருவாகிகள் 50 க்கும் மேற்பட்டோர்கட்சியினர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Tags:    

Similar News