கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம்; தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தை கண்டித்து புதுக்கோட்டையில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2024-06-25 10:11 GMT

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் , இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்ட தேமுதிக சார்பில் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் திலகர் திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேரணியாகச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது சாலையில் படுத்து தேமுதிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசாருக்கும் தேமுதிகளுக்கு இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் இந்த பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது. அப்போது தேமுதிகவினர் கள்ளச்சாராய சம்பவத்திற்கு பொறுப்பேற்று திமுக அரசு பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதை எடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேமுதிகவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்....

Tags:    

Similar News