கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம்; தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தை கண்டித்து தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2024-06-25 10:16 GMT

தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே தேமுதிக கட்சி சார்பில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து உயிர் இழப்பை அடுத்து, திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட கழக செயலாளர் குமார்,விஜய் சங்கர், தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளர் மாநில மீனவர் அணி துணை செயலாளர் நிஜாமுதீன் சிறப்புரையாற்றினார்.விஜய் வெங்கடேஷ், ராமச்சந்திரன் ,தங்கவேல், சரவணன், ராஜேந்திரன், ரங்கநாதன், ஜம்பேரி கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளச்சாராயண மரணத்திற்கு பொறுப்பு ஏற்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆட்சியை ராஜினாமா செய்ய வேண்டும். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணத்திற்கு நீதி வேண்டும். போதை பொருட்கள் பழக்கம் தமிழ்நாட்டில் உள்ளது ஆர்ப்பாட்டத்தில் பேசினார் கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News