தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2024-01-05 07:54 GMT
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினுள் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு வட்டாரத் தலைவர் ஆறுமுகம் தலைமையில், தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் அளித்ததுபோல் அரசாணை 243 ஐ திரும்பப் பெற்று பழைய நடைமுறைக்கு முன்னுரிமை வழங்க வேண்டும், தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வை உடனடியாக பழைய நடைமுறையில் வழங்கிட வேண்டும், ஊதிய முரண்பாட்டை சரி செய்து சமவேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும்,பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்தை வழங்கிட வேண்டும்,அரசு பள்ளிகளுக்கு வழங்குகிற அனைத்து சலுகைகளையும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் வழங்கிட வேண்டும், ஈட்டிய விடுப்பு, அகவிலைப்படி நிலுவை வைகளை உடனே வழங்கிட வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News