தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

கருணை அடிப்படையில் பணி நியமனம் கேட்டு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2024-06-25 13:18 GMT

கருணை அடிப்படையில் பணி நியமனம் கேட்டு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம். கரூர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு கருணை அடிப்படை பணி நியமனம் கேட்டு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட துணை தலைவர் மகேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் விஜயகுமார், மாவட்ட இணை செயலாளர் குப்புசாமி,மாவட்ட தலைவர் கருணாகரன்,மாவட்ட செயலாளர் தாமோதரன், உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தமிழகம் முன்னாள் முதல்வர் கருணாநிதி கருணை அடிப்படையில் ஆன பணி நியமனம் 25 சதவீதமாக வழங்கி வந்தார். தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசாணை எண் 33 வெளியிட்டு, அதில் 25 சதவீதம் என்று இருந்ததை குறைத்து 5 சதவிகிதமாக வெளியிட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் மீண்டும் 25 சதவீதமாக உயர்த்தி ஆணை பிறப்பிக்க வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் முருகையன்,சேகர், ராமசாமி, சதாசிவம் ஆகியோர் முன்னில வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் ரமேஷ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News