பெரம்பலூரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும், ஊரக வளர்ச்சி துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும், முறையான பதிவு உயர்வு வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெயபால் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட அலுவலர்கள் முழக்கமிட்டனர். தொடர்ந்து கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.