சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க கோரி ஆர்ப்பாட்டம்
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
Update: 2024-03-05 15:57 GMT
ஆர்ப்பாட்டம்
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கக் கோரி சென்னையில் நடைபெறும் பட்டினிபோராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இளைஞர்அரண் மக்கள் ஜனநாயக குடியரசு கட்சி சார்பில் கும்பகோணத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் சைமன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ராகவேந்தர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.