மோட்டார் தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

மோட்டார் தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Update: 2023-11-26 11:20 GMT

நாமக்கல்லில் மோட்டார் தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நாமக்கல் மாவட்ட மோட்டார் இன்ஜினீயரிங் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சாா்பில், மோட்டார் தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி, எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்துள்ள புதிய மோட்டாா் வாகன சட்டத்தால், நாடு முழுவதும் லாரி, பஸ், டாக்ஸி, மினி லாரி, சரக்கு ஆட்டோ உள்ளிட்ட அணைத்து வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இழந்து தவித்து வருகின்றனர். எனவே மத்திய அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற்று, சாலை போக்குவரத்து தொழிலைப் பாதுகாக்க வேண்டும்.

தமிழ்நாடு போக்குவரத்துத் துறை மூலம் சமீபத்தில் உயர்த்தப்பட்ட சாலை வரி உயா்வை ரத்து செய்ய வேண்டும். ஆன்லைன் அபராதம் மூலம் வெளியூர்களில் உள்ள லாரிகளுக்கு உள்ளூரில் அபராதம் விதிக்கப்படுகிறது. எனவே ஆன்லைன் அபராதம் முறையைக் கைவிட்டு ஸ்பாட் பைன் விதிக்கலாம். வட்டாரப்போக்குவரத்து அலுவலகம் மூலம் வழங்கப்படும் சேவைகள் அனைத்தையும் ஆன்லைன் முறையில் வழங்கும் வெப்சைட் சேவையை உடனடியாக தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட குழு உறுப்பினா் முனியப்பன் போராட்டத்திற்கு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளா் சுரேஷ், மாவட்ட துணைச் செயலாளா் ஆனந்தன், சிஐடியு தலைவா் வெங்கடாசலம், எலச்சிபாளையம் கிளை தலைவா் சேகா், ரமேஷ் மாபாஷா உள்பட பலா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Tags:    

Similar News