கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு 2 மது கடைகளை மூட வேண்டி ஆர்ப்பாட்டம் !

திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள  நாமக்கல் செல்லும் சாலை மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள 2 மது கடைகளை மூட வேண்டி பலமுறை வலியுறுத்தியும் தமிழக அரசு செவி சாய்க்காததால் இன்று தேமுதிக திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் கே.எஸ். குமார் ஆலோசனைப்படி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.

Update: 2024-02-26 12:13 GMT

மது கடைகளை மூட வேண்டி ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம் முசிறியில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் முசிறி பைபாஸ் சாலையில் வசிக்கும் மக்களுக்கு இடையூறாக இருக்கும் இரண்டு மது கடைகளை மூட வேண்டும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள மது கடைகள் மூட வேண்டும் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் மூடாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் என்று தேமுதிக பாமக எம்ஜிஆர் கழகம் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்தனர்  பின்பு கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாச்சியரிடம் இரண்டு மது கடைகளை மூட வேண்டி அனைத்து கட்சியினரும் மனு அளித்தனர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முசிறி நகர  செயலாளரும் நகர மன்ற உறுப்பினருமான சுந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக தலைமை செயற்குழு உறுப்பினர் முசிறி ராஜலிங்கம், ஒன்றிய கழக செயலாளர்கள் ஜெயராமன், சந்தோஷ் முன்னாள் ஒன்றிய செயலாளர் சுரேஷ் குமார்  இதில் பாட்டாளி மக்கள் கட்சி நகர செயலாளர் மனோகரன், எம்ஜிஆர் கழக நகர செயலாளர் கணேசன் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் பாட்டாளி மக்கள் கட்சி, எம் ஜி ஆர் கழகம் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News