வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் செயல் விளக்க பயிற்சி

நாகைமாவட்டம் கீழ்வேளூர் வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பதறாகுவதை தடுக்க  ப்ளூம் தொழில்நுட்பம் குறித்த செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2024-02-02 16:27 GMT

பயிற்சியில் கலந்து கொண்டவர்கள் 

சம்பா பருவத்தில் ஏற்படும் பருவநிலை மாற்றம் காரணமாக நெல் பதறாகுதல் (கருக்காய்) மூலம் ஏற்படும் மகசூல் இழப்பை தடுக்க தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பயிர் வினைவியல் துறை சார்பில் கண்டறியப்பட்டு இருக்கும் புதிய வகை நெல் ப்ளூம் என்ற வளர்ச்சி ஊக்கி கலவை நல்ல பலனை தருவதாக  இதை நெற்பயிரில் பூட்டை பருவத்தில் அதாவது பூப்பதற்கு சற்று முன்பு நான்கு

கிலோ நெல் ப்ளூமுடன் சிறிது ஒட்டு திரவத்தையும் சேர்த்து 200 லிட்டர் தண்ணீரில் நன்றாக கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்கும்போது நெற்பயிரில் பதறுகள் உருவாவது குறைந்து மகசூல் சுமார் 15 சதவீதம் அதிகரிக்கிறது.

இதே போல், நெல் பால் பிடிக்கும் தருணத்திலும் அதே அளவு கொண்ட நெல் ப்ளூம் எனும் ஊட்டச்சத்து ஊக்கியை தெளிக்க வேண்டும். இதன் செயல்  விளக்கம் மற்றும்  பயிற்சி நாங்குடியில் நடைபெற்றது. தொடக்க நிகழ்ச்சிக்கு     வேளாண் உதவி இயக்குனர் தேவேந்திரன் முன்னிலை வகித்தார்.  வேளாண் விரிவாக்கத்துறை பேராசிரியர் தாமோதரன் வரவேற்றார். வேளாண்மை பல்கலைக்கழகம் கீழ்வேளூர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் ரவி தலைமை தாங்கி  தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் சிறுகமணி வேளாண் அறிவியல் மையத்தின் பயிர் வினைவியல் துறை இணை பேராசிரியர் ராஜா பாபு, உதவி பேராசிரியர்  பாபு ராஜேந்திர பிரசாத் ஆகியோர்கள் செயல் விளக்க பயிற்சி அளித்தார்கள்.

நிகழ்ச்சியில் , உளவியல் துறை உதவி பேராசிரியர்  கலைசுதர்சன்  மற்றும் 50க்கும் மேற்பட்ட முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News