கண்டிப்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் - ராஜேந்திர பாலாஜி

திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளித்தாலும் அளிக்காவிட்டாலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என சிவகாசியில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே. டி ராஜேந்திர பாலாஜி தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-23 04:27 GMT

 முன்னாள் அமைச்சர் கே. டி ராஜேந்திர பாலாஜி 

கள்ளக்குறிச்சி சம்பவத்தை கண்டித்து வரும் 24-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் திமுக அரசை பதவி விலக வலியுறுத்தி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்ட அதிமுக சார்பில் வரும் 24-ம் தேதி திமுக அரசை கண்டித்து விருதுநகர் தேசபந்து மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அம்மாட்ட அதிமுக அறிவித்திருந்தது.

இது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன்சிவகாசியில் உள்ள தனியார் ஹோட்டலில் முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி தலைமையில் அக்கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் தற்போது வரை அனுமதி தரவில்லை. அனுமதி அளித்தாலும் அளிக்காவிட்டாலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.‌ விருதுநகர் மாவட்ட அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் பத்தாயிரம் பேர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். அதிமுக தொண்டர்கள் சிறை செல்லவும் தயாராக இருக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.

திமுக ஆட்சியில் தமிழகத்தில் போதை கலாச்சாரம் மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. அதனை தடுக்கத் தவறிய திமுக அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் விருதுநகர் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி திமுகவால் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றோம். . நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் வெறும் நான்கு கட்சிகளை வைத்து ஓட்டு சதவீதத்தை அதிகமாக பெற்று இருக்கிறோம். அதிமுக மக்களவைத் தேர்தலில் விழுந்தது தோல்வி இல்லை. திமுக வென்றது வெற்றியும் இல்லை. மக்களவை தேர்தல் வரை வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு என தெரிவித்த திமுக தேர்தலுக்குப் பின் வாயை மூடிக் கொண்டது.

திமுக தலைவர் இது குறித்து தற்போது பேசுவது கிடையாது. 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற பின்னர் தவறு செய்ய திமுக தொடங்கியுள்ளனர். அஜாகிரதியாக ஆட்சி நடத்துவது. இதற்கு அடையாளமாக தான் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பிரச்சனை எழுந்துள்ளது. திமுக ஆட்சி நிர்வாக சீர்கேடு சீர்குலைவு. திமுக ஆட்சி நிர்வாகம் சரியாக இயங்கவில்லை. கல்வராயன் மலையே கள்ளச்சாராயம் மலையாக மாறிவிட்டது. கல்வராயன் மலையில் தயாரிக்கப்படும் சாராயம் வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு செல்வதாக சொல்லப்படுகிறது. கள்ளக்குறிச்சி உயிரிழப்புகள் நடந்த ஜூன் 19ஆம் தேதி தமிழக அரசியலில் ஒரு கருப்பு தினம் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News