எருது விடும் விழாவிற்கு அனுமதி மறுப்பு - கிராம மக்கள் சாலை மறியல்

வாணியம்பாடி அருகே எருது விடும் விழாவிற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்காததை கண்டித்து அரசு பேருந்தை சிறைபிடித்து கிராம மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-01-18 02:35 GMT

சாலை மறியல் 

 திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தில் ஆண்டு தோறும் காணும் பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாள் எருது விடும் திருவிழா கடந்த 50 ஆண்டிற்கும் மேலாக நடைப்பெறுவது வழக்கம், அதன்படி இந்த ஆண்டும் வெள்ளக்குட்டை கிராமத்தில் எருது விடும் விழாவிற்கு கிராம மக்கள ஏற்பாடு செய்து மாவட்ட நிர்வாகத்தின் அனுமதிக்காக காத்திருந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் நேற்று  மாலை வரையில் எருதுவிடும் திருவிழாவிற்கு அனுமதி வழங்காததால், ஆத்திரம் அடைந்த வெள்ளக்குட்டை கிராம மக்கள்  அவ்வழியாக வாணியம்பாடி - ஆலங்காயம் சென்ற தனியார் பேருந்து சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சரவணன் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் ஒப்புக்கொள்ளாமல் போராட்டகாரர்கள் வாணியம்பாடி - ஆலங்காயம் சாலையில் காளை மாடுகளை அழைத்து வந்து இரவு 10 மணி வரையில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், வாணியம்பாடி வட்டாச்சியர் மோகன், வாணியம்பாடி கோட்டாச்சியர் ( பொறுப்பு) பானு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டு, எருது விடும் விழாவிற்கு அனுமதியில்லையெனவும், தமிழக அரசு எருது விடும் விழாவிற்கு அனுமதி அளித்து ஆணை பிறப்பித்த பின்னர் மற்றொரு தேதியில் எருது விடும் திருவிழா நடத்திக்கொள்ள அனுமதி அளிப்பதாக உறுதியளித்தின் பேரில் சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர், இதனால் வெள்ளகுட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது...

Tags:    

Similar News